கிரிக்கெட்

‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’; கேப்டன் மிதாலிராஜ் பேட்டி + "||" + ‘I will try one more time to win the World Cup’; Interview with Captain Mithaliraj

‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’; கேப்டன் மிதாலிராஜ் பேட்டி

‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’; கேப்டன் மிதாலிராஜ் பேட்டி
‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’ என கேப்டன் மிதாலிராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் 37 வயதான மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்திய போது நமது அணி ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் போனதால் நான் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தேன். 2017-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றிக்காக முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அதன்படி அந்த உலக கோப்பை போட்டிக்காக நான் கடினமாக உழைத்தேன். அந்த உலக கோப்பை போட்டியில் நமது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் அந்த போட்டியுடன் ஓய்வு பெற்று விடலாம் என்று எண்ணினேன். ஆனால் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டோம். நீண்ட நாட்கள் விளையாடுவதன் மூலம் அனேகமாக நான் எல்லாவற்றையும் பெற்று விட்டேன். ஆனால் உலக கோப்பை மட்டும் எனக்கு இன்னும் கிட்டவில்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை வெல்ல மற்றொரு முறை முயற்சி மேற்கொள்வேன். எல்லோருடைய வாழ்த்துகளுடனும், கடவுளின் ஆசியுடனும் இந்த முறை எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் எனது வாழ்க்கையில் தானாக வந்ததாகும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று தான் விரும்பினேன். பெண்கள் கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 2006-07-ம் ஆண்டில் வந்தது. இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்து இருந்தால் இந்திய பெண்கள் கிரிக்கெட் இன்னும் சிறப்பான நிலையை எட்டி இருக்கும். அந்த காலகட்டத்தில் நிதி பிரச்சினை காரணமாக பல திறமையான வீராங்கனைகள் மற்ற துறைகளுக்கு மாறி விட்டார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்துள்ளேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
2. துளிகள்
இங்கிலாந்து அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் கோபத்தில் ஓய்வு பெறுவது குறித்து 100 சதவீதம் சிந்தித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.
3. கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி
கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவம் பெற்றேன் என நடிகை டாப்சி கூறியுள்ளார்.
4. அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது; மைக் பாம்பியோ பேட்டி
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ பேட்டியில் கூறியுள்ளார்.
5. சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.