கிரிக்கெட்

இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா + "||" + "MS Dhoni Has Played His Last Game For India," Says Ashish Nehra

இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா

இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா
இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி. கடந்த உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் டோனி விளையாடவில்லை. இதனால், அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழும் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.  

விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி நிச்சயம் பங்கேற்பார் என்ற போதிலும், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடுவாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. டோனியும் இது பற்றி வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் டோனியின் தலைமையின் கீழ் விளையாடியவருமான ஆஷிஸ் நெஹ்ரா,  இந்திய அணிக்காக டோனி இனி விளையாட மாட்டார் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,  இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்  ஊடகங்கள் தான் தொடர்ந்து இது பற்றி விவாதித்து கொண்டிருக்கின்றன.

டோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.  வரும் ஐபிஎல் போட்டியில் டோனி விளையாடுவதற்கும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். டோனி விளையாட தயாராக இருந்தால், கேப்டனோ பயிற்சியாளரோ, தேர்வுக்குழுவினரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் சுமார் 17 சதவீதம் காற்று மாசுபட்டிருந்ததன் காரணமாக உயிரிழந்திருப்பர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
2. இந்தியாவுக்கு சவுதி அரேபியா தீபாவளி பரிசு: கில்கிட்-பலுசிஸ்தான் -காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கியது
இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு - கில்கிட்-பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கி உள்ளது.
3. இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு
இந்திய மக்கள் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும் என சீனாவை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி நேற்று பேசியிருந்தார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லியை பந்தாடியது. வார்னர், சஹா அரைசதம் விளாசினர்.
5. சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.