கிரிக்கெட்

‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார் + "||" + ‘Dhoni plays last match for India’; Nehra says

‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார்

‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கூறியதாவது:-
புதுடெல்லி,

எனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். டோனி இனி நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததால் அதை பற்றி நாமும், ஊடகத்தினரும் பேசிக் கொண்டு இருக்கிறோம். மனதில் என்ன உள்ளது என்பதை அவர் தான் அறிவிக்க வேண்டும்.

வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற கருத்தை நான் நம்பவில்லை. ஏனெனில் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை பொறுத்தவரை டோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. டோனி விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.  இவ்வாறு நெஹரா கூறினார்.

39 வயதான டோனி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத டோனி தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறார்.