கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்; கங்குலி தகவல் + "||" + Women's 20 over Challenger cricket match; Ganguly information

பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்; கங்குலி தகவல்

பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்; கங்குலி தகவல்
பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும் என கங்குலி தெரிவித்து உள்ளார்.
மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் இந்த முறை நடத்தப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்திய வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 3 அணிகள் இடையிலான இந்த போட்டி நவம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.