அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்


அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2020 7:05 AM GMT (Updated: 3 Aug 2020 7:05 AM GMT)

கடந்த 1994 ஆம் ஆண்டு 37-பந்துகளில் அப்ரிடி சதம் அடித்ததே அதிவேக சதமாக அப்போது பதிவு செய்யப்பட்டது.

இஸ்லமாபாத்,


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அதாவது 37-பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த அப்ரிடி உலக அளவில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கினார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடைபெற்ற போட்டியில் 11 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் மின்னல் வேக சதம் விளாசி தனது 16-வயதிலேயே கிரிக்கெட் ரசிகர்களை புருவத்தை உயர்த்த வைத்தவர் அப்ரிடி.

அப்ரிடியின் இந்த சாதனை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனால் தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு பந்து வீச்சாளராகவும் சராசரி பேட்ஸ்மேன் ஆகவும் அறிமுகம் ஆன அப்ரிடி, தனது 2-வது போட்டியிலேயே இவ்வளவு இமாலய சாதனையை படைத்தது அவரது எஞ்சிய  கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

இந்த நிலையில், அப்ரிடி 37- பந்துகளில் சதம் அடித்த போது பயன்படுத்திய பேட், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருடையது என்று தெரியவந்துள்ளது. அப்ரிடி ஏற்கனவே தனது சுய சரிதை புத்தகத்தில் இதை தெரிவித்திருந்தாலும் கூட பாகிஸ்தான் முன்னாள் அசார் முகம்மது தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

Next Story