கிரிக்கெட்

இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது + "||" + The last ODI between England and Ireland takes place today

இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது.
சவுதம்டன்,

ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தொடரை முழுமையாக கைப்பற்ற இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற அயர்லாந்து அணி ஆர்வத்துடன் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பை எதிர்பார்க்கலாம்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது: ஸ்டாலின்
தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
2. சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது போலீஸ் கமிஷனர் தகவல்.