கிரிக்கெட்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.
சென்னை,

* இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக இருந்து வரும் நைக் நிறுவனத்தின் 4 ஆண்டு கால ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஸ்பான்சரை தேடும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கி இருக்கிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

* மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ‘ஆன்லைன்’ மூலம் நடந்த விழாவில் பேசுகையில், ‘இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து திறமையான இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட இருக்கிறது. இதற்காக இன்னும் சில மாதங்களில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு ஆகிய 5 மண்டலங்களில் கமிட்டி அமைக்கப்படும். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 12 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த 10-15 ஆண்டுகளில் நமது அணி ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற விரும்பினால் தற்போது இந்த கால்பந்து பயிற்சி திட்டத்தை தொடங்க வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

* இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா உள்பட 15 பேர் சென்னை நேருபார்க்கில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 5 மாத இடைவெளிக்கு பிறகு ஸ்குவாஷ் அகாடமி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி நடந்த இந்த பயிற்சியில் 15 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் என்று இந்திய ஸ்குவாஷ் சம்மேளன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் ஜோனதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதான டிராட் இங்கிலாந்து அணிக்காக 52 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 7 இருபது ஓவர் போட்டியில் விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று தொடங்குகிறது: பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்குகிறது.
2. இனி எல்லை தாண்டினால்... பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. துளிகள்
இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது.
4. துளிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.
5. மாற்றங்களால் ஏற்றம் பெறுமா பஞ்சாப்?
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.