வழிகாட்டுதல் நடைமுறையால் பயிற்சியாளர்கள் அருண்லால், வாட்மோர் பதவிக்கு சிக்கல்


வழிகாட்டுதல் நடைமுறையால் பயிற்சியாளர்கள் அருண்லால், வாட்மோர் பதவிக்கு சிக்கல்
x
தினத்தந்தி 3 Aug 2020 11:32 PM GMT (Updated: 3 Aug 2020 11:32 PM GMT)

வழிகாட்டுதல் நடைமுறையால் பயிற்சியாளர்கள் அருண்லால், வாட்மோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்த சீசனுக்கான உள்நாட்டு கிரிக்கெட் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் பின்பற்ற வேண்டிய இந்த புதிய நடைமுறையில் வீரர்களுக்கான பயிற்சி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்ட யாரையும் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட பயிற்சியாளர்களான இந்திய முன்னாள் வீரர் அருண்லால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் டேவ் வாட்மோர் ஆகியோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 66 வயதான டேவ் வாட்மோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரோடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 65 வயதான அருண்லால் பெங்கால் அணியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய நடைமுறையால் அருண்லால், வாட்மோர் ஆகியோர் இந்த சீசனில் தங்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Next Story