2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து விலகியது சீனாவின் விவோ நிறுவனம்


2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து விலகியது சீனாவின் விவோ நிறுவனம்
x
தினத்தந்தி 6 Aug 2020 11:40 AM GMT (Updated: 6 Aug 2020 11:40 AM GMT)

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் விலகியது. விவோவின் இந்த முடிவு பிசிசிஐக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது


பீஜிங்

சீன-இந்தியா பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவின் மொபைல் போன் நிறுவனமான விவோவுடனான ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ  நிறுத்தியது. 

"இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான தங்கள் கூட்டணியை நிறுத்த முடிவு செய்துள்ளன என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் விலகியது. விவோவின் இந்த முடிவு பிசிசிஐக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில் அடுத்த மாதம் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் தற்போது புதிய ஸ்பான்சர்களை தேடிப்பிடிக்கும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

விவோ 2018 முதல் 2022 வரை ஐபிஎல்  ஸ்பான்சர்ஷிப் உரிமையை 2190 கோடி ரூபாய்க்கு எடுத்து உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 440 கோடி ரூபாய் ஆகும்.



Next Story