கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 326 ரன்னில் ஆல்-அவுட் - ஷான் மசூத் சதம் அடித்தார் + "||" + First Test against England: Pakistan all-out for 326

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 326 ரன்னில் ஆல்-அவுட் - ஷான் மசூத் சதம் அடித்தார்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 326 ரன்னில் ஆல்-அவுட் - ஷான் மசூத் சதம் அடித்தார்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
மான்செஸ்டர், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்க நாள் முடிவில் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 69 ரன்னுடனும், தொடக்க வீரர் ஷான் மசூத் 46 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். மழையால் முதல் நாளில் 41 ஓவர்கள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் (69 ரன்) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் சிக்கினார். இது ஆண்டர்சனின் 590-வது விக்கெட்டாகும். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (7 ரன்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 176 ரன்களுடன் தடுமாறியது.

இதன் பின்னர் ஷான் மசூத்துடன், ஷதப் கான் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இங்கிலாந்து பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து ஆடிய ஷான் மசூத் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் தொடர்ந்து 3 இன்னிங்சில் சதம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் ஸ்கோர் 281 ரன்களாக உயர்ந்த போது ஷதப் கான் (45 ரன்) வெளியேறினார். இதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ்சின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்திய ஷான் மசூத் 156 ரன்களில் (319 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது. 14 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 32 ரன்களுடன் தள்ளாடியது. பென் ஸ்டோக்ஸ் ரன்னின்றி வீழ்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது.
2. இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது.
3. 2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.