கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் இந்திய பயணம் தள்ளிவைப்பு + "||" + Postponement of England team's tour of India

இங்கிலாந்து அணியின் இந்திய பயணம் தள்ளிவைப்பு

இங்கிலாந்து அணியின் இந்திய பயணம் தள்ளிவைப்பு
இங்கிலாந்து அணியின் இந்திய பயணம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் மாற்றி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி அந்த சமயத்தில் ஐ.பி.எல். போட்டி தொடங்க இருப்பதால் இங்கிலாந்து தொடர் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அந்த பயணத்தின் போது தற்போது தள்ளிவைக்கப்பட்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சேர்த்து நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.