பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி


பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 8 Aug 2020 7:14 PM GMT (Updated: 8 Aug 2020 7:14 PM GMT)

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மான்செஸ்டர், 

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (151 ரன்) சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து   அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 169 ரன்கள் சேர்த்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் பறிகொடுத்தது.

இதையடுத்து,  277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துவக்கத்தில் தடுமாறியது. 117  ரன்களுக்கு  5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த   கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story