கிரிக்கெட்

ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா? + "||" + Vivo's IPL 2020 exit is not a "financial crisis" - Sourav Ganguly

ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா?

ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன செல்போன் நிறுவனமான ‘விவோ’ சில தினங்களுக்கு முன்பு விலகியது.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன செல்போன் நிறுவனமான ‘விவோ’ சில தினங்களுக்கு முன்பு விலகியது. 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை ‘விவோ’வின் ஒப்பந்தம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்பான்சர்ஷிப்பாக ரூ.440 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ‘விவோ’ வழங்கியது.

வருவாய் பகிர்ந்தளிப்பு அடிப்படையில் இந்த வருவாயில் இருந்து ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளுக்கும் கிட்டத்தட்ட ரூ.20 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியது. இப்போது இதே தொகை அளவுக்கு புதிய ஸ்பான்சர் கிடைப்பது கடினம் தான். அதனால் அணிகளுக்கு கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்படலாம்.

இதே போல் ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் வருமானமாக ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிட்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது கேள்விக்குறியாகி வரும் நிலையில் அந்த வகையிலும் அணிகளுக்கு இழப்பு தான்.

மேலும் வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்களை தனி விமானத்தில் அழைத்து செல்வது, ஓட்டலில் தங்க வைப்பது, மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது என்று ஒவ்வொரு அணிகளுக்கும் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. வழக்கமாக இந்தியாவில் போட்டி நடக்கும் போது ஆகும் செலவை விட இது 50-60 சதவீதம் அதிகமாகும். செலவினம் ஒரு பக்கம் என்றால் வருவாயும் கொட்டாமல் இல்லை.

ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.3,300 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது. இவற்றில் இருந்து ஆதாயமாக ஒவ்வொரு அணிகளும் ரூ.150 கோடியை பெறுகின்றன. அத்துடன் சீருடை, கிட்ஸ் உள்ளிட்ட இதர ஸ்பான்சர்ஷிப் மூலம் ரூ.50 கோடி வரை அணிகளுக்கு கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
2. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்: பிசிசிஐ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
5. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.