டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சி ஒன்றில் டோனியின் ஓய்வு திட்டம் குறித்து பேசுகையில், ‘2017-ம் ஆண்டில் நடந்த விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது டோனியிடம் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது அவர், அணியில் வேகமாக ஓடும் சக வீரரை தோற்கடிக்கும் வரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அல்லது உயர்தர கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய அளவுக்கு போதுமான உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிந்து கொள்வேன் என்று என்னிடம் கூறினார்.
சாம்பியன் வீரர்களான தெண்டுல்கர், டோனி போன்றவர்களை ஆடுகளத்தில் இருக்கையில் ஒருபோதும் முழுமையான உடல் தகுதியுடன் இல்லாமலோ அல்லது வேகமாக ஓட முடியாத நிலையிலோ பார்க்க முடியாது. வரும் ஐ.பி.எல். தொடரில் டோனி சிறப்பாக செயல்படுவார்’ என்றார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. கடைசி நாளில் முடிவு கிடைக்குமா? அல்லது டிராவில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.