கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் - வாசிம் அக்ரம் + "||" + Azhar Ali's poor captaincy was the reason for his defeat in the first Test against England - Wasim Akram

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் - வாசிம் அக்ரம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் - வாசிம் அக்ரம்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.


* கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நவம்பர் 19-ந்தேதி முதல் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் தொடருடன் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் நவம்பர் 10-ந்தேதி நிறைவடைந்து விடும் என்றாலும் கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தும் நடைமுறை இருப்பதால் ஐ.பி.எல்.-ல் ஆடும் இந்திய வீரர்கள் முஸ்தாக் அலி தொடரில் சில ஆட்டங்களில் ஆட முடியாது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியை டிசம்பர் 13-ந்தேதி முதல் மார்ச் 10-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே, துலீப் கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு கிடையாது.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் 14-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளனர்.

* இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டதற்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் குற்றம் சாட்டியுள்ளார். ‘இந்த ஆட்டத்தில் சில நேரங்களில் சரியான வியூகங்களை செயல்படுத்த அசார் அலி தவறி விட்டார். குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கிய போது, அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பவுன்சரோ, ஷாட்பிட்ச் பந்துகளோ வீசப்படவில்லை. அவரை நிலைத்து நின்று சுலபமாக ரன் எடுக்க அனுமதித்து விட்டனர். ஆட்டத்தின் போக்கு எப்படி இருந்தாலும் அதிவேகமாக பந்து வீசக்கூடிய இளம் பவுலர்களான நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோரை இன்னிங்சுக்கு 18-20 ஓவர்கள் வீச வைக்கவேண்டும்’ என்று அக்ரம் குறிப்பிட்டார்.

*சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நாக்-அவுட் சுற்றில் தோல்வி எதிரொலியாக யுவென்டஸ் (இத்தாலி) அணியின் பயிற்சியாளர் மவுரிஜியோ சாரி கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இத்தாலி முன்னாள் வீரர் ஆன்ரியோ பிர்லோ நியமிக்கப்பட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!
இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.
2. இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகி உள்ளார்.
5. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34/1
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது.