கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம்; முதன்மை ஸ்பான்சராக மாற பதஞ்சலி நிறுவனம் தீவிரம் + "||" + 2020 IPL sponsorship; Patanjali is keen to become the primary sponsor

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம்; முதன்மை ஸ்பான்சராக மாற பதஞ்சலி நிறுவனம் தீவிரம்

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம்; முதன்மை ஸ்பான்சராக மாற பதஞ்சலி நிறுவனம் தீவிரம்
2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான முதன்மை ஸ்பான்சர்ஷிப் என்ற இடத்தைப் பெற பதஞ்சலி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
மும்பை,

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது. ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை பெற கடைசி நாள் ஆகஸ்ட் 14 என்றும், ஒப்பந்தத்தை பெற்றவர்கள் விவரம் வரும் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இந்த விளம்பர ஒப்பந்தம் டிசம்பர் 31ம் தேதி வரை என கால அளவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே முதன்மை ஸ்பான்சர்ஷிப் என்ற இடத்தை பெற, யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனம் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. சீன செல்போன் நிறுவனமான விவோ விலகி உள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்க பதஞ்சலி நிறுவனம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.