நியூசிலாந்துக்கு சென்று விளையாட தயாராகும் 4 அணிகள்


நியூசிலாந்துக்கு சென்று விளையாட தயாராகும் 4 அணிகள்
x
தினத்தந்தி 12 Aug 2020 1:34 AM GMT (Updated: 12 Aug 2020 1:34 AM GMT)

நியூசிலாந்துக்கு சென்று 4 அணிகள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் நேற்று கூறுகையில், ‘நியூசிலாந்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கு தீவிரமான முயற்சி மேற்கொண்டுள்ளோம். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு போன் செய்து பேசிய போது, நியூசிலாந்துக்கு வந்து விளையாட உடனடியாக ஒப்புக் கொண்டனர்.

இதே போல் ஆஸ்திரேலியாவும், வங்காளதேசமும் வர சம்மதம் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் 37 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியும் வருகை தர இருக்கிறது. வெளிநாட்டு அணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசாங்கத்துடன் ஆலோசித்து வருகிறோம். எல்லா திட்டமிடலும் சரியாக அமைந்ததும் போட்டி அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும்’ என்றார்.

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அங்கு 22 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Next Story