இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் தள்ளிவைப்பு


இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 1:45 AM GMT (Updated: 12 Aug 2020 1:45 AM GMT)

இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை நவம்பர் மாதத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரிமீயர் லீக் (எல்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்களை தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்த்திக் கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு இருப்பதால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல் காரணமாக இந்த போட்டியை நவம்பர் மாதத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.

ஐ.பி.எல். முடிந்து நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 12-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் லங்கா பிரிமீயர் லீக்கை நடத்த திட்டமிட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்னே தெரிவித்தார்.

Next Story