ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் புதிய ஸ்பான்சர் யார்? - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் + "||" + Who is the new sponsor of IPL cricket tournament? - Indian Cricket Board Information
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் புதிய ஸ்பான்சர் யார்? - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் புதிய ஸ்பான்சர் யார் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 18-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறது.
* சீன நிறுவனமான ‘விவோ’ விலகியதைத் தொடர்ந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் புதிய முதன்மை ஸ்பான்சருக்கான டெண்டர் விண்ணப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெறுவதற்கு ஆர்வம் காட்டும் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அன்அகாடமி, டெண்டர் படிவத்தை வாங்கிக் சென்றுள்ளது. ஸ்பான்சர்ஷிப்பாக ரூ.300 கோடி முதல் ரூ.350 கோடி வரை எதிர்பார்க்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய ஸ்பான்சர் யார்? என்பதை வருகிற 18-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறது.
* கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பரில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. என்றாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் ஒரு வேளை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானால், மாற்று இடமாக இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.