கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல் + "||" + 2nd Test against England: Pakistan stutter

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
சவுதம்டன், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷதப் கானுக்கு பதிலாக பவாத் ஆலம் சேர்க்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பவாத் ஆலம் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு சாம் கர்ரனும், பென் ஸ்டோக்சுக்கு பதிலாக ஜாக் கிராவ்லியும் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. தொடக்க வீரர் ஷான் மசூத் (1 ரன்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி (20 ரன், 85 பந்து) மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெளியேற்றப்பட்டார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த மற்றொரு தொடக்க வீரர் அபித் அலி 60 ரன்களில் கேட்ச் ஆனார். இதற்கிடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியது. ஆசாத் ஷபிக் (5 ரன்), பவாத் ஆலம் (0) தாக்குப்பிடிக்கவில்லை.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்த போது ஆட்டம் மழையால் மறுபடியும் நிறுத்தப்பட்டது. அப்போது பாபர் அசாம் (25 ரன்), முகமது ரிஸ்வான் (4 ரன்) களத்தில் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
2. ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
பகல்-இரவு டெஸ்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 9,834 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.