கிரிக்கெட்

பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா சென்னை வந்தனர் + "||" + Dhoni and Suresh Raina came to Chennai to participate in the training camp

பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா சென்னை வந்தனர்

பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா சென்னை வந்தனர்
பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சென்னை வந்தனர்
சென்னை, 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, பியுஷ் சாவ்லா, கரண் சர்மா, கேதர் ஜாதவ், மோனு சிங் உள்ளிட்ட வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

புனேயில் இருந்து புறப்பட்ட அந்த சிறப்பு விமானம் டெல்லி, ராஞ்சி, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்று வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்னை வந்தடைந்தது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் நேராக அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் தனி பிளாக்கில் தங்கினார்கள். சேப்பாக்கத்தில் பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை பார்க்க வெளியாட்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. 

பயிற்சியின் போது வீரர்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் மைதான ஊழியர்கள், ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், வீரர்களை அழைத்து வரும் வாகனங்களின் டிரைவர்கள் உள்பட முகாமுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாமின் போது வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வரும் வீரர்கள் தான் அமீரகம் செல்ல முடியும்.

பயிற்சி முகாமை முடித்துக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வருகிற 21-ந் தேதி தனி விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேரடியாக துபாய் வந்து அணியினருடன் இணைந்து கொள்வார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2. துளிகள்
இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
4. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில்‘டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்’-ஷேவாக் கருத்து
ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.