கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங் எப்படி? + "||" + How is Dhoni's captaincy and wicket-keeping retiring from international cricket?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங் எப்படி?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங் எப்படி?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் செய்த சாதனைகள் வெளியாகி உள்ளன.
சென்னை, 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவர் டோனி என்றால் மிகையல்ல. அவரது தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அதில் 27-ல் வெற்றியும், 18-ல் தோல்வியும், 15-ல் டிராவும் கண்டுள்ளது.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற மகிமைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டியில் அவரது தலைமையில் இந்திய அணி 200 ஆட்டங்களில் விளையாடி அதில் 110 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ளது. 74-ல் தோல்வி அடைந்துள்ளது. 5 ஆட்டம் டை ஆனது. 11 ஆட்டங்களில் முடிவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் 72 ஆட்டங்களில் கேப்டனாக பணியாற்றி 41-ல் வெற்றியை தேடித் தந்துள்ளார். மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் மொத்தம் 829 முறை அவுட் (634 கேட்ச், 195 ஸ்டம்பிங்) செய்திருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் டோனி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டை சாதனையின் உச்சத்துக்கு அழைத்து சென்ற கேப்டன்களில் ஒருவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக அணியில் நீடித்தார். அதிரடியாக ஆடுவதில் வல்லவரான டோனியின் ஆட்டத்திறன் சமீப காலமாக வெகுவாக தளர்ந்தது. ஆனாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்று கூறும் அளவுக்கு மிகச்சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தனது எதிர்கால திட்டம் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். அவர் ஐ.பி.எல். போட்டியில் ரன் குவித்து, அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்வார் என்று நிறைய கணிப்புகள் உலா வந்தன. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் விடைபெறுவார் என்பது தான் நிபுணர்களின் ஆரூடமாக இருந்தது.



 

திடீர் ஓய்வு

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு இந்தியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை. இதனால் ரசிகர்களின் முன்னிலையில் பிரிவுபசார போட்டியில் ஆட முடியாது என்பதை உணர்ந்து ஓய்வுக்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி நேற்று முன்தினம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங்குடன் கூடிய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது.

தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்த டோனி சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் டோனி தான். அத்துடன் அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி டெஸ்டில் நம்பர் ஒன் அரியணையிலும் ஏறியது. இலங்கைக்கு எதிரான 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் திரட்டி ஆட்டநாயகனாக ஜொலித்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.

களத்தில் யுக்திகளை வகுப்பதில் சாதுர்யமாக செயல்படக்கூடிய டோனி, களத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார். கோபத்தை வெளிக்காட்டமாட்டார். அதனால் தான் அவரை ‘கூல் கேப்டன்’ என்று வர்ணிப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ‘தல’ என்றும் அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.

இதுவரை...

டோனி இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 4,876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 10 சதம், 73 அரைசதம் உள்பட 10,773 ரன்களும் (சராசரி 50.57) குவித்துள்ளார். இதில் 229 சிக்சரும் அடங்கும். 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசியது ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்சமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 98 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,617 ரன்கள் எடுத்துள்ளார்.



டோனியின் கடைசி ஆட்டம்

டோனியின் கடைசி சர்வதேச போட்டி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டமாகும். அந்த ஆட்டத்தில் கடைசி வரை போராடிய டோனி 50 ரன்னில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டோனி தனது முதலாவது ஆட்டத்திலும் ரன்-அவுட் ஆனது நினைவு கூரத்தக்கது.

தெண்டுல்கர்-கோலி வாழ்த்து

ஓய்வு பெற்ற டோனிக்கு, ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘டோனி இந்திய கிரிக்கெட்டுக்காக செய்துள்ள சாதனைகள் ஒவ்வொரு மனதிலும் எப்போதும் நிலைத்து நிற்கும்’ என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
2. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில்‘டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்’-ஷேவாக் கருத்து
ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.
4. கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என தோனி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
5. பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா சென்னை வந்தனர்
பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சென்னை வந்தனர்