டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி


டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி
x
தினத்தந்தி 16 Aug 2020 3:23 AM GMT (Updated: 16 Aug 2020 3:23 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக விளங்கிய டோனி, நாட்டின் 74-வது சுதந்திர தினமான நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

மும்பை,

யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். அவரது ஓய்வு அறிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி, நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

அந்த வகையில், சக வீரராக டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன். இந்த நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும். நான் மனிதனை பார்ப்பேன். என பதிவிட்டுள்ளார்.

Next Story