கிரிக்கெட்

ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம் + "||" + MS Dhoni Retires: Sakshi Dhoni Shares Emotional Post on Dhoni's Retirement - 'You Must Have Held Those Tears to Say Goodbye to Your Passion'

ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம்

ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தோனி நேற்று அறிவித்தார்.
ராஞ்சி,

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தோனியின் மனைவி சாக்‌ஷி கூறியுள்ளார்

இது குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்‌ஷி கூறியிருப்பதாவது: " நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு வாழ்த்துக்கள். சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன். 

விரும்பிய இவ்விளையாட்டிலிருந்து விடைபெறும்போது நீங்கள் எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிவேன். உங்களுடைய ஆரோக்கியம், மகிழ்ச்சியை விரும்புகிறேன், இனி பல அற்புதமான விஷயங்கள் முன்னே உள்ளது” எனக் கூறியுள்ளார். 

மேலும்,  "நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்." என்ற மாயா ஏஞ்சலோவின் தத்துவ வார்த்தைகளையும் சாக்‌ஷி மேற்கோள் காட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
2. 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3. இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
4. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா
மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.