கிரிக்கெட்

மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’ + "||" + Rain-hit: 2nd Test 'draw' between England and Pakistan

மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’

மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’
இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’ வில் முடிந்தது.
சவுதம்டன்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ‘ஆல்அவுட்‘ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மழை குறுக்கிட்ட 4-வது நாளில் 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்து இருந்தது.


நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஈரப்பதம் மற்றும் மழை காரணமாக 4 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 43.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பு இல்லாததால் ‘டிரா’வில் முடித்து கொள்ள இரு அணியின் கேப்டனும் ஒப்புக்கொண்டனர். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
2. பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய பாதுகாப்பு படையினர்
பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்
3. இங்கிலாந்தின் முதல் அபூர்வமான தம்பதி தந்தையே தாயானார்
இங்கிலாந்தில் , முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
4. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.
5. ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை
ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்து உள்ளது.