கிரிக்கெட்

ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற டிரீம் லெவன் + "||" + IPL 2020 title sponsorship: Fantasy gaming startup Dream11 bags rights for Rs 222 crore

ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற டிரீம் லெவன்

ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற டிரீம் லெவன்
ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை டிரீம் லெவன் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
புதுடெல்லி

உலகஅளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டிவந்தன.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

இந்தநிலையில், 59 சீன ஆப்களைத் தடை செய்து இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதனால், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்துவருகிறது.

இதை தொடர்ந்து  ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக விவோ நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து, டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.

இந்தநிலையில், பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை  டிரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2. ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் -பெங்களூரு கேப்டன் கோலி.
ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் என்று பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
3. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டம் - மேக்ஸ்வெல் மீது சேவாக் விமர்சனம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் மேக்ஸ்வெல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக சேவாக் விமர்சித்துள்ளார்.
4. "ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" - ஷேன் வாட்சன்
அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது.
5. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன செல்போன் நிறுவனமான ‘விவோ’ சில தினங்களுக்கு முன்பு விலகியது.