கிரிக்கெட்

டோனி ஓய்வு அறிவிப்பு: இனி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணமாட்டேன் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா + "||" + Dhoni has retired, so have I, says his Pakistan-born fan 'Chacha Chicago'

டோனி ஓய்வு அறிவிப்பு: இனி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணமாட்டேன் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா

டோனி ஓய்வு அறிவிப்பு: இனி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணமாட்டேன் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா
இந்திய அணி வீரர் டோனி இல்லாததால் இனி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணமாட்டேன் என அவரின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா தெரிவித்துள்ளார்.
சிகாகோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் டோனியின் தீவிர ரசிகரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் இனி இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லபோவதில்லை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த முகமது பஷீர், சிகாகோவில் வசித்து வருகிறார். உலகத்தில் எங்கு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் அங்கு முகமது பாஷா கண்டிப்பாக இருப்பார். பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இல்லை, டோனிக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவதற்கு. ஆம், இவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் டோனிக்கு தான் ஆதரவு தெரிப்பார்.

இவர் தற்போது டோனியின் ஓய்வு குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், டோனி இல்லாததால் இனி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகில் எங்கு நடைபெற்றாலும் காண செல்லப்போவதில்லை.

ஒவ்வொரு வீரரின் பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வரும். ஆனால் டோனியின் ஓய்வு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பெரிய அளவிலான போட்டியில் ஓய்வு அளித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வினை பரிந்துரைத்து உள்ளது.
2. ஐபிஎல் போட்டி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்
ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
3. ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி
ஐபிஎல் 9 வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.
4. ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.2400 கோடி விளம்பர வருவாய்; ஆனாலும் வருத்தம் ஏன்...?
13 வது சீசன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. பீகார் அரசியல் : கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் கனவில் தேஜஸ்வி யாதவ்
பீகார் அரசியலில் கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் போட்டியாளராக தேஜஸ்வி யாதவ் கடந்து வந்த பாதை