கிரிக்கெட்

‘மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்யக்கூடாது’ - அஸ்வினுக்கு பாண்டிங் எச்சரிக்கை + "||" + ‘Don’t let anyone out in Mankat mode’ - Ponting warns Aswin

‘மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்யக்கூடாது’ - அஸ்வினுக்கு பாண்டிங் எச்சரிக்கை

‘மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்யக்கூடாது’ - அஸ்வினுக்கு பாண்டிங் எச்சரிக்கை
‘மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்யக்கூடாது’ அஸ்வினுக்கு பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியது. பந்து வீசும் முன்பே, பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் மீண்டும் இது போன்று ரன்-அவுட் செய்வேன், விதிமுறைப்படி இந்த அவுட் சரியே என்றும் கூறியிருந்தார். அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக களம் இறங்க உள்ளார்.


இந்த நிலையில் ‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தை கொண்டு ரன்-அவுட் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார். பாண்டிங் கூறுகையில், ‘எங்களது கிரிக்கெட் அணுகுமுறையில் இந்த மாதிரி அவுட் செய்வதற்கு இடமில்லை. அதை நாங்கள் செய்யமாட்டோம். அஸ்வின் அணியுடன் இணைந்ததும் முதல் விஷயமாக இது பற்றி தான் பேசப்போகிறேன். அது கடினமான விவாதமாக இருக்கும். ‘மன்கட்’ முறைப்படி அவுட் செய்வது விதிமுறைக்குட்பட்டது என்று அவர் வாதிடலாம். ஆனால் அது விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. குறைந்தது டெல்லி அணியினர் இந்த வழியை கடைபிடிக்கக்கூடாது என்று விரும்புகிறேன்’ என்றார். அஸ்வின் அருமையான ஒரு பவுலர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பாக பந்து வீசி வருவதாகவும் பாண்டிங் கூறினார்.