கிரிக்கெட்

டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி + "||" + PM Modi pens touching letter to MS Dhoni, hails former India captain's love for armed forces

டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி

டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டோனியின்  இந்த முடிவு குறித்து பல்வேறு விளையாட்டு வீரர்களும்,பிரபலங்களும், அரசியல்கட்சி தலைவர்களும் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.

அதிலவ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர். சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் டோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும்.

2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை டோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே டோனியை சுருக்கி விட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு டோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் டோனி.

சக வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது டோனி தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.
2. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. இந்த ஆண்டு எங்களுக்கானதாக அமையவில்லை - தோல்விக்குப் பிறகு டோனி பேட்டி
நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
4. இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது - பிரதமர் மோடி
பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
5. மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்
பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.