ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க துபாய் புறப்பட்டு சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி + "||" + Chennai Super Kings, including Mahendra Singh Dhoni, leave for the United Arab Emirates from Chennai airport for Indian Premier League (
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க துபாய் புறப்பட்டு சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டுச்சென்றது.
சென்னை,
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஊரடங்கால் பெரும்பாலான வீரர்கள் வீட்டிலேயே முடங்கியதால் அவர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாலும், கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதாலும் 8 அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களும் 4 வாரத்திற்கு முன்பாகவே அமீரகம் செல்கிறார்கள். இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணி வீரர்கள் நேற்று அமீரகம் புறப்பட்டு சென்று விட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பியுஷ் சாவ்லா, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று தனிவிமானம் மூலம் பிற்பகல் துபாய் புறப்பட்டு சென்றனர்.
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்