கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு + "||" + Prime Minister Modi congratulates Raina on his retirement from international cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய இடக்கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவை எடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் மிகவும் இளமையாகவும், ஆற்றல் மிக்கவராகவும் இருக்கிறீர்கள். ஆக்கபூர்வமான கிரிக்கெட் இன்னிங்சுக்கு பிறகு வாழ்வின் அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிறீர்கள்.


2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் உங்களது உத்வேகம் மிக்க பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதில், ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால்இறுதியில் உங்களது ஆட்டத்தை நேரில் பார்த்தேன். உங்களது ஆக்ரோஷமான செயல்பாடு இந்திய அணியின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தது. உங்களது ‘கவர் டிரைவ்’ ஷாட்டை ரசிகர்கள் இனிமேல் தவறவிடுவார்கள். உங்களது அந்த ஆட்டத்தை கண்டுகளித்தது எனது அதிர்ஷ்டம். உங்களது துடிப்பான பீல்டிங்கும், சிறப்பான கேட்ச்களும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.