கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர் + "||" + IPL Cricket: Chennai, Mumbai, Bangalore team went to Dubai

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர்.
சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், பியுஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனுகுமார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.


பயிற்சியை முடித்துக் கொண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று மதியம் தனிவிமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். பயிற்சி முகாமில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோரும் சென்னை வந்து அணியுடன் இணைந்து பயணித்தனர். அங்கு சென்றதும் வீரர்கள் தங்களுக்குரிய ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். 6 நாட்களில் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ‘நெகட்டிவ்’ முடிவு வந்ததும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல்அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், ‘டோனி பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். பயிற்சியின் போது மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்தார். டோனி மிகவும் இயல்பாக, தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தார். அவரது ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்கூட்டியே தெரியாது. அவரது ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு மூலம் தெரிய வந்ததும் வீரர்கள் ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள்.

நீண்ட காலம் ஓய்வில் இருந்த வீரர்களுக்கு இந்த பயிற்சி முகாம் பயனுள்ளதாக அமைந்தது. வீரர்கள் அனைவரும் சரியான மனநிலையில் உள்ளனர்’ என்றார்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியினரும் நேற்று துபாய் புறப்பட்டனர். ரோகித் சர்மா தனது மனைவி, மகளையும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுக்குட்பட்டு அழைத்து சென்றார். ஏற்கனவே பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணியினரும் அங்கு சென்று விட்டனர். எஞ்சிய ஐதராபாத், டெல்லி அணி வீரர்கள் ஓரிரு நாட்களில் கிளம்ப உள்ளனர்.

மும்பை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இலங்கையைச் சேர்ந்த மலிங்கா அணியிருடன் புறப்படவில்லை. மலிங்காவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வருகிற வாரங்களில் ஆபரேஷன் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. தந்தையை அருகில் இருந்து அவர் கவனித்து வருகிறார். இதனால் அவர் கொழும்பிலேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார். தாமதமாக புறப்படும் நிலை உருவாகியுள்ளதால் அனேகமாக அவர் ஓரிரு ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் குவிப்பு
ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
2. 2-வது கட்ட ஆய்வு: சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது - மாநகராட்சி தகவல்
2-வது கட்ட ஆய்வில் சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
3. கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்
மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 84 ரன்கள் எடுத்துள்ளது.
5. முதல்-அமைச்சரின் தாயார் மறைவு: சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி சென்னையில் எடப்பாடி பழனிசாமியை கவர்னர் பன்வாரிலால் சந்தித்து ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.