கிரிக்கெட்

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி ! + "||" + IPL 2020: MS Dhoni's 'class' act, gives up his business class seat for Chennai Super Kings director

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி !

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர்.
துபாய்,

வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். விமான பயணத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடைபிடித்த எளிமை அவரது ரசிகர்களை வியப்பு அடையச் செய்துள்ளது. 

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஜார்ஜ் என்பவருக்காக தோனி தனது பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்துள்ளார். விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஜார்ஜ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

அதில் "கிரிக்கெட்டில் எல்லா சாதனையும் படைத்த ஒருவர் என்னிடம் வந்து 'உங்கள் கால்கள் மிகவும் நீளமாக இருக்கிறது, நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையில் உட்காருங்கள், நான் எகானமி கிளாஸில் உட்காருகிறேன்' என்று கூறினார். கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார்"  என பதிவிட்டுள்ளார்.

தோனியின் இந்த எளிமையான செயல் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இது தொடர்பான விடீயோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.