கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியினருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார் + "||" + AB de Villiers joins Royal Challengers Bangalore squad in Dubai

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியினருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியினருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியினருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார்.
துபாய், 

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 

இந்த போட்டிக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணியினர் தனி விமானம் மூலம் ஏற்கனவே அமீரகம் சென்று விட்டனர். விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் நேற்று முன்தினம் துபாய் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். 

இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நேற்று அதிகாலை துபாய் சென்று அணியிருடன் இணைந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பிஞ்ச், கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் பிலிப் ஆகியோர் செப்டம்பர் 16-ந் தேதிக்கு பிறகும், மொயீன் அலி (இங்கிலாந்து), இசுரு உதனா (இலங்கை) ஆகியோர் இன்னும் சில தினங்களிலும் அணியினருடன் சேருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு
அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள்? - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.