தோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று - கங்குலி


தோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று - கங்குலி
x
தினத்தந்தி 24 Aug 2020 8:33 AM GMT (Updated: 24 Aug 2020 8:33 AM GMT)

தோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இந்நிலையில் தோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று என்று முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவருமான கங்குலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “தோனி, அதிக ஓவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த ஆட்டங்களில் எல்லாம் பெரிய ஸ்கோர் குவித்து இருக்கிறார். அதனால் தான் அவர் முன்வரிசையில் ஆட வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. அவரிடம் இருந்த வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று. விசாகப்பட்டனத்தில் தோனிக்கு மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு தரப்பட்டது. இதில் சதம் அடித்து அசத்தினார். சச்சின் தொடர்ந்து 6வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் இந்தளவுக்கு வியக்கத்தக்க பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்க மாட்டார். ஏனெனில் பின் வரிசையில் அதிக பந்துகள் எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்காது. ஒரு சிறந்த வீரர் உருவாக வேண்டும் என்றால் அவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்க வேண்டும். பின் வரிசையில் விளையாடினால் இது முடியாது” என்று தெரிவித்தார். 


Next Story