கிரிக்கெட்

சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு + "||" + If anyone can break Sachin Tendulkar's record of 100 centuries, it's Virat Kohli: Irfan Pathan

சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு

சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு
சச்சினின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. சச்சினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ( 71 சதங்கள்) உள்ளார். 

இந்த நிலையில், சச்சினின் இந்த சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இர்பான் பதான்,  “ 100 சதங்கள் குறித்து விராட் கோலி சிந்திப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். 

இது குறித்து விராட் கோலி பேசாமல் இருக்கலாம். ஆனால்,. சச்சினின் இந்த சாதனைகளை முறியடிக்கக் கூடிய ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலிதான். மிக குறுகிய காலத்தில் பல சாதனைகளை விராட் கோலி நிகழ்த்தியுள்ள்ளார். சச்சினின் 100 சதம் என்ற சாதனைகளை ஒரு வீரர் முறிடியக்கிறார் என்றால் அது விராட் கோலியாக மட்டுமே இருக்க முடியும்’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
2. இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
3. மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா
மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.
4. பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இன்று 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
5. அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி: இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.