இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் அணி போராட்டம்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் அணி போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2020 11:15 PM GMT (Updated: 24 Aug 2020 8:21 PM GMT)

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது.

சவுதம்டன்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 93 ஓவர்களில் 273 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. கேப்டன் அசார் அலி 141 ரன்களுடன் (272 பந்து, 21 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ‘பாலோ-ஆன்’ ஆன பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மழையால் 2 முறை பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 18 ரன்னிலும், அபித் அலி 42 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மழை குறுக்கீடு இல்லையெனில் அந்த அணி தோல்வியில் இருந்து தப்புவது கடினம். 56 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து இருந்தது. அசார் அலி 29 ரன்னுடனும், பாபர் அசாம் 4 ரன்னுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.

Next Story