‘மன்கட்’ முறையில் அவுட் செய்வதை விமர்சிக்கக்கூடாது - தினேஷ் கார்த்திக் கருத்து


‘மன்கட்’ முறையில் அவுட் செய்வதை விமர்சிக்கக்கூடாது - தினேஷ் கார்த்திக் கருத்து
x
தினத்தந்தி 24 Aug 2020 11:30 PM GMT (Updated: 24 Aug 2020 8:24 PM GMT)

‘மன்கட்’ முறையில் அவுட் செய்வதை விமர்சிக்கக்கூடாது - தினேஷ் கார்த்திக் கருத்து

துபாய்,

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட்டில் வினோ மன்கட் செய்து இருக்கும் சாதனைகளுக்காக நினைவு கூறாமல் எதிர்மறையான கருத்து கொண்ட ‘ரன்-அவுட்’டுக்கு அவரது பெயரை பயன்படுத்துவது தவறானதாகும். பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு முன்னேறினால் ரன்-அவுட் செய்யலாம் என்று விதிமுறை உள்ளது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் எம்.சி.சி. ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. டான் பிராட்மேன், கவாஸ்கர் போன்ற வீரர்களும் அத்தகைய ‘ரன்-அவுட்’ விதிமுறைப்படி சரியானது தான் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அந்த மாதிரியான ரன்-அவுட் செய்யும் பவுலரை விமர்சிக்கக்கூடாது. அந்த முறையில் முதல்முறையாக ஆட்டம் இழந்த பேட்ஸ்மேன் பில்லி பிரவுனை (ஆஸ்திரேலியா) யாரும் நினைவில் வைக்கவில்லை. ஆனால் ரன்-அவுட் செய்த பவுலரான வினோ மன்கட்டை மட்டும் நினைவில் கொள்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு வினோ மன்கட் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். அவரது பெயரை எதிர்மறையான கண்ணோட்டத்தில் அழைக்கக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story