கிரிக்கெட்

கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பிசிசிஐ + "||" + IPL 2020: Two players, 11 others test positive for Covid-19 - BCCI

கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பிசிசிஐ

கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பிசிசிஐ
கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று உள்ளனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.


இந்நிலையில் இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவரும் பிசிசிஐ நிர்வாகம் வீரர்கள், ஐபிஎல் ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 28 ஆம் தேதிவரை கொரோனா பரிசோதனை செய்தது.

இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி ஐபிஎல் மருத்துவக்குழு கண்காணித்துவருவதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் தொடர்: காலி மைதானத்திலாவது நடத்த முடியுமா? என ஆலோசித்து வருகிறோம்-சவுரவ் கங்குலி
ஐபிஎல் தொடரை காலி மைதானத்திலாவது நடத்த முடியுமா என ஆலோசித்து வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை; இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது - பிசிசிஐ
ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்தநிலையில், இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3. இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத் தயார் - பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத்தயாராக இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.