கிரிக்கெட்

சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: நிகோலஸ் பூரன் சதம் அடித்து அசத்தல் + "||" + C.P.L. 20 over cricket

சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: நிகோலஸ் பூரன் சதம் அடித்து அசத்தல்

சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: நிகோலஸ் பூரன் சதம் அடித்து அசத்தல்
6 அணிகள் இடையிலான 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது
போர்ட் ஆப் ஸ்பெயின்,

6 அணிகள் இடையிலான 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்-கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய கயானா அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நிகோலஸ் பூரன் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசி தனது முதல் சதத்தை எட்டினார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். 7-வது ஆட்டத்தில் ஆடிய கயானா அணி பெற்ற 3-வது வெற்றி இது.