ரெய்னாவின் உறவினர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம்: விசாரணைக் குழுவை அமைத்தது பஞ்சாப் அரசு


ரெய்னாவின் உறவினர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம்: விசாரணைக் குழுவை அமைத்தது பஞ்சாப் அரசு
x
தினத்தந்தி 2 Sep 2020 6:37 AM GMT (Updated: 2 Sep 2020 6:37 AM GMT)

சுரேஷ் ரெய்னாவின் உறவுனர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.

லக்னோ,

கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ரெய்னாவின் கோரிக்கையை பஞ்சாப் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ரெய்னாவின் குடும்பத்தினர் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பான தகவலை டிஜிபி டிங்கர் குப்தா தெரிவித்துள்ளார்.

Next Story