கிரிக்கெட்

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் + "||" + After Suresh Raina, Harbhajan Singh Pulls Out Of IPL, Says "Personal Reasons" To CSK

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டி தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பயிற்சிகளையும் அணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், தனது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை அணி இன்னும் பயிற்சியை துவங்கவில்லை. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது நினைவிருக்கலாம். ஹர்பஜன் சிங் சென்னை அணியுடன் துபாய் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்த நிலையில், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.