கிரிக்கெட்

ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு + "||" + IPL Twenty20 cricket match full schedule release

ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19ந்தேதி முதல் நவம்பர் 10ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும், வெளிநாட்டு வீரர்களின் வருகையை கணக்கில் கொள்ள வேண்டியது இருப்பதாலும், போட்டி நடைபெறும் இடங்களில் வெவ்வேறான தனிமைப்படுத்துதல் விதிமுறை உள்ளதாலும் அட்டவணை வெளியாவதில் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று கூறினார்.  இதன்படி, ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.  இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 19ந்தேதி நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இனி எல்லை தாண்டினால்... பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும்; மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது: பள்ளிகள் திறப்புக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
3. துளிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.
4. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
5. உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக அரசு வெளியீடு
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.