கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது + "||" + 20 over cricket against Australia: England won the 2nd match and won the series

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
சவுதம்டன்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 40 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர்.


வார்னர் (0), ஸ்டீவன் சுமித் (10 ரன்) ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களம் கண்ட இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் (54 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மலான் 42 ரன்களும், மொயீன் அலி 6 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி கண்டது.