கிரிக்கெட்

சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றி + "||" + C.P.L. Cricket: Trinbago Knight Riders win

சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றி

சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றி
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.
போர்ட் ஆப் ஸ்பெயின், 

6 அணிகள் இடையிலான 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அணி, டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் 77 ரன்னில் சுருண்டது. டிரின்பாகோ அணி தரப்பில் பவாத் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் ஆடிய டிரின்பாகோ அணி 11.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் ஜமைக்கா தல்லவாஸ் அணியை வீழ்த்தியது.

லீக் ஆட்டங்கள் முடிவில் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் (10 ஆட்டங்களிலும் வெற்றி) 20 புள்ளிகளுடன் முதலிடமும், கயானா அமேசான் வாரியர்ஸ் (6 வெற்றி, 4 தோல்வி) 12 புள்ளிகளுடன் 2-வது இடமும், செயின்ட் லூசியா ஜோக்ஸ் (6 வெற்றி, 4 தோல்வி) 12 புள்ளிகளுடன் 3-வது இடமும், ஜமைக்கா தல்லவாஸ் (3 வெற்றி, 6 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளிகளுடன் 4-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் (6 புள்ளி), செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் (3 புள்ளி) முறையே 5-வது, கடைசி இடமும் பெற்று வெளியேறின. இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்-ஜமைக்கா தல்லவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2. சி.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் டிரின்பாகோ
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.