கிரிக்கெட்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது + "||" + The last 20-over cricket match between England and Australia: takes place today

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இன்று நடக்க உள்ளது.
சவுதம்டன், 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அத்துடன் அந்த அணி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டேவிட் மலான், விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முதலாவது ஆட்டத்தில் 44 ரன்னும், 2-வது ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் குவித்த ஜோஸ்பட்லர் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி வருகிறது. இதனால் அந்த அணி சறுக்கலை சந்தித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வந்து ஆறுதல் வெற்றியை ருசிக்க ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
3. இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
பகல்-இரவு டெஸ்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 9,834 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.