கிரிக்கெட்

சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + C.P.L. Cricket: St. Lucia team advances to final

சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிரினிடாட், 

8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது அரைஇறுதியில் கயானா அமேசான் வாரியர்ஸ்-செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கயானா அணி 13.4 ஓவர்களில் 55 ரன்னில் சுருண்டது. இது சி.பி.எல். வரலாற்றில் 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். தொடர்ந்து ஆடிய டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா அணி 4.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா ஜோக்ஸ், பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்சை சந்திக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் டிரின்பாகோ
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
2. சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றி
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.