சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ அணி ‘சாம்பியன்’


சி.பி.எல். கிரிக்கெட்:  டிரின்பாகோ அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 10 Sep 2020 10:49 PM GMT (Updated: 10 Sep 2020 10:49 PM GMT)

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டிரின்பாகோ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிரினிடாட்,

8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வந்தது. இதில் டிரினிடாட்டில் நேற்று நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டிரின்பாகோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா 19.1 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆந்த்ரே பிளட்செர் 39 ரன்கள் எடுத்தார். டிரின்பாகோ தரப்பில் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களம் கண்ட டிரின்பாகோ அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. லென்டில் சிமோன்ஸ் 84 ரன்களும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), டேரன் பிராவோ 58 ரன்களும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர்.

Next Story