கிரிக்கெட்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது + "||" + One day cricket between England and Australia takes place today

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
மான்செஸ்டர்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் தொடரில் சொதப்பிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு நாள் தொடரில் சாதிக்கும் முனைப்புடன் உள்ளார். அதே சமயம் இந்த சீசனில் உள்ளூரில் நடக்கும் கடைசி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் வேட்கையுடன் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஆயத்தமாக உள்ளது.

ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இன்று களம் காண உள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அதிரடி வீரர் ஜாசன் ராயின் வருகை இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டுவதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்றான சூப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அணியின் வெற்றிக்கு 10 புள்ளியும், டை அல்லது முடிவு கிடைக்காமல் போனால் 5 புள்ளியும் வழங்கப்படும். அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது போலீஸ் கமிஷனர் தகவல்.
2. தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
3. இனி எல்லை தாண்டினால்... பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு; காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் நடக்கிறது
பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் மாநாடு, அடுத்த மாதம் காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
5. மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடந்து கொண்டு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.