கிரிக்கெட்

என் இனிய தமிழ் மக்களே; இம்ரான் தாஹிர் உற்சாகம் + "||" + My dear Tamil people; Imran Tahir Excitement

என் இனிய தமிழ் மக்களே; இம்ரான் தாஹிர் உற்சாகம்

என் இனிய தமிழ் மக்களே; இம்ரான் தாஹிர் உற்சாகம்
என் இனிய தமிழ் மக்களே என இம்ரான் தாஹிர் உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர்(தென்ஆப்பிரிக்கா), மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து) ஆகியோர் நேற்று துபாய் சென்றடைந்து அணியுடன் இணைந்தனர். 41 வயதான இம்ரான் தாஹிர் கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவிகரமாக இருந்தார்.

அவர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘என் இனிய தமிழ் மக்களே.... தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் தருவாயில், நாங்கள் வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டத்தை காண தயாரா? எடுடா வண்டிய போடுடா விசில்’ என்று கூறியுள்ளார்.